Friday, July 31, 2020

தேசிய கல்வி கொள்கை - 2020 - ஒரு பார்வை 

1) ஒன்றாம் வகுப்பு முதல் இருக்கும் கட்டாய கல்வி விரிவுபடுத்தி மூன்று வயது முதல் கல்வி கட்டாயம் என்கிறது வரைவு கொள்கை (P 1.8), ஆனால் தற்போது வெளியிட்டு இருக்கும் இறுதி வடிவத்தில், எந்த வயதில் இருந்து கல்வி கட்டாயம் என்று குறிப்பிடப்படவில்லை? 

2) பள்ளிகள் தொடங்க இருக்கும் விதிகளை தளர்த்த முடிவு, தனியார் / அறக்கட்டளை பங்களிப்புக்கு முக்கியத்துவம் தரப்படும் (3.6). 

3) வாய்ப்புகள் இருக்கும்போது, ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி / மாநில மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டும், முடிந்தால் 8 ஆம் வகுப்பை வரையும் (4.11)

- இது மாநில மற்றும் சிபிஎஸ்சி பாடதிட்டத்துக்கும் பொருந்துமா? இல்லை, வெறும் மாநில பாடதிட்டத்துக்கு மட்டும் தான் பொருந்துமா?

- இந்த விதிமுறையால், ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்க ஏதேனும் தடை இருக்கா?

4) மும்மொழி கொள்கையை அமுல்படுத்துவதற்கு ஏதுவாக, இதர மொழி ஆசிரியர்களை பிற மாநிலங்களில் இருந்து நியமனம் செய்து கொள்ளலாம் (4.12).  உதாரணத்துக்கு, இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து இந்தி ஆசிரியர்களை நியமனம் செய்ய  வாய்ப்பாக அமையும்.

5)அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு மும்மொழி கொள்கை செயல்படுத்தப்படும். அந்த மூன்று மொழிகளை அந்த அந்த மாநிலங்கள் முடிவு செய்யலாம், அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் (4.13)

- தமிழ்நாடு அரசு அரசியல் அமைப்புக்கு உட்பட்டு இரு மொழி கொள்கையை பின்பற்றி வருகிறது, மக்கள் விருப்பமும் அதுவே. தமிழ்நாட்டிற்கு மும்மொழி கொள்கையில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா ?

6) சமஸ்கிரதம் அனைத்து நிலைகளிலும் / வகுப்புகளிலும் வழங்கப்படும் என்று கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் மற்ற மொழிகளுக்கு தரப்படவில்லையே ஏன் ? இதர மொழிகள் ஆன்லைன் முறையில் வழங்கப்படும் என்று தான் சொல்லப்பட்டு இருக்கிறது. (4.17 / 4.18)

சமஸ்கிரதத்துக்கு மட்டும் இந்த முக்கியம் ஏன்?

7) நாடு முழுவதுக்கும் ஒரே பாடத்திட்டம் உருவாக்கப்படும் (4.31 / 4.32), 

இது மாநிலங்களின் தனி அடையாளம் , மொழி , பண்பாடு போன்றவற்றை குறைத்து விடாதா ?

8) பொது தேர்வை மேம்படுத்த வேண்டும், நுழைவு தேர்வு நீக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறதே தவிர நீட் போன்ற அனைத்து நுழைவு தேர்வுகளும் ரத்து செய்யப்படும் என்று எதுவும் குறிப்பிடவில்லை 

9) மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பில் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்படும். 

- தேர்வை நடத்துவது எல்லாம் சரி, இதில் தோல்வி அடைந்தால் அடுத்த வகுப்பிற்கு மாணவர்கள் செல்ல முடியுமா? இல்லை, இடை நிறுத்தம் செய்யப்படுமா?

- தேர்வில் தோல்வி அடைந்தால், அடுத்து என்ன என்று தெளிவாக சொல்லப்படவில்லையே?

10) இந்தியா முழுவதும் உள்ள அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு பொது நுழைவு தேர்வு நடத்தப்படும் (4.42)

- ஒவ்வொரு மாநிலத்திலும் தனி தனி பல்கலைக்கழங்கள் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழங்கள் இருக்கின்றன. நாடு முழுவதுக்கும் என்று சொல்லப்படும் நுழைவு தேர்வு கட்டாயமா இல்லை மாநிலங்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப சேர்க்கை நடத்தி கொள்ள முடியுமா?

11) இளங்கலை கலை / அறிவியல் (BA  / BSC ) பாட பிரிவும், பி.எட் பாடப்பிரிவும் தனி தனியாக இருந்தது. தற்போது ஒருங்கிணைந்த நான்கு வருட பி.எட் என்று வரும்போது, அதை படிப்பவர்கள் மேற்படிப்பு வாய்ப்புகள் என்ன இருக்கு? ஒருங்கிணைந்த பி.எட் படித்து அரசாங்க வேலை கிடைக்க வில்லை என்றால், அவர்களுக்கு வேற வேலைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் என்ன?

12) குறைந்த மாணவர்கள் அல்லது கிராமங்களில் இருக்கும் பள்ளிகள் ஒருங்கிணைத்து பள்ளி வளாகங்கள் உருவாக்கப்படும் (7.6). 

- 10 கிலோமீட்டர் வரை உள்ள பள்ளிகள் ஒருங்கிணைத்து , பள்ளி வளாகங்கள் உருவாக்கப்பட்டால், ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வருவது குறையும், பெண் குழந்தைகளை தூரத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு அனுப்ப தயங்குவார்கள். கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது மற்றும் சமூக நீதிக்கு எதிரானது

- எவ்வளவு முடியுமோ அவ்வளவு பக்கத்தில் தான் பள்ளிகள் இருக்க வேண்டுமே தவிர, நிர்வாக காரணங்களை காட்டி பள்ளி வளாகங்கள் அமைப்பது சமூக நீதிக்கு எதிரானது 

13) பள்ளி வளாகங்களுக்கு தன்னாட்சி வழங்கப்படும், தேசிய பாடதிட்டத்துக்கு உட்பட்டு பள்ளி வளாகங்களே பாட திட்டத்தை முடிவு செய்யலாம்.

- இந்த விதி அரசு பள்ளிகளுக்கு பொருந்துமா?
- தனியார் / அறக்கட்டளை நடத்தும் பள்ளிகளுக்கு தன்னாட்சி வழங்கப்படுமா?
- தன்னாட்சி வழங்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இருக்குமா? மத்திய அரசுக்கா? யார் தன்னாட்சியை வழங்குவார்கள் 


No comments:

Post a Comment

தேசிய கல்வி கொள்கை - 2020 - ஒரு பார்வை  1) ஒன்றாம் வகுப்பு முதல் இருக்கும் கட்டாய கல்வி விரிவுபடுத்தி மூன்று வயது முதல் கல்வி கட்டாயம் என்கி...